சாதிகள் உருவானதற்கும், அவைகளிடையே பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் இயற்கைதான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? விரிவாகப் பார்ப்போம்.
காரணங்கள்:
சில நூற்றாண்டுகள் முன்புவரை தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதிகள் உலகில் இல்லை. ஆனால் உலகின் மிகச்சில பகுதிகளிலேயே நிலவளமும், நீர்வளமும், உயிர்கொடுக்கும் அபரிமிதமான சூரிய ஒளியும், விவசாய அறிவும், பொதுவான அமைதியும் எப்போதும் தொடர்ந்து இருந்துள்ளது. அப்படிப்பட்ட பகுதிகளில் இந்தியாவும் ஒன்று.
அதாவது, மக்கள் விவசாயம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்ததால், அவர்களின் ஊரைச்சுற்றி மாட்டுவண்டி அல்லது குதிரையில் செல்லும் தூரம் மட்டுமே திருமண உறவு கொண்டிருந்தனர். அதாவது ஆங்காங்கு குறுகிய நிலப்பரப்புகளில் மக்கள் அடத்தியாக வாழ்ந்து வந்துள்ளனர் - அவர்களின் அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு இந்தியாவின் வளம்மிக்க நிலப்பரப்பு வசதியாக இருந்துவந்துள்ளது. (இன்றும்கூட இந்தியா 125 கோடி மக்களுக்கு உணவளித்து வருகிறது. ரஷ்ஷியாவிலோ, ஐரோப்பாவிலே, அரேபியாவிலோ இவ்வளவு பெரிய மக்கள்தொகை வாழமுடியாது.)
ஒருவருக்கொருவர் அதிகம் தொடர்பில்லாமல் பல நூறு ஆண்டுகள் வாழ்தபடியால், தனித்தனியான மொழிகள், வாழக்கை முறைகள், ஒரே மொழியிலும் அதிகமான வேறுபாடுகள், ஒரே மதத்தை பின்பற்றினாலும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் என, மிக அதிகமான பன்முகத்தன்மை பெற்றுவிட்டோம். அதன் விளைவுகள்தான் வெவ்வேறு ஜாதிகள்.
ஜாதி = டி.என்.ஏ.
ஜாதிகள் என்றாலே வேறுவேறு டி.என்.ஏ. உள்ளவர்கள் என்று பொருள். அதனாலேயே மக்கள் முதலியார், செட்டியார், கவுண்டர், தேவர், பிராமணர், ஹரிஜன், இன்னும் ஆயிரம் ஆயிரம் டி.என்.ஏ. பிரிவுகளில் பிரிந்துள்ளனர். கீரைகளில்கூட முளைக்கீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை என்று ஆயிரம் வகைகள். அதுபோலத்தான் ஜாதிகளும். ஒருவரின் முகத்தைப்பார்த்தே அவர் செட்டியாரா, முதலியாரா, தேவரா, பிராமணரா என்று சொல்ல முடிவதற்கு காரணம் இதுதான்.
பிரச்சினை ஏன்?
ஒவ்வொரு டி.என்.ஏ. வகையினரும் தன்னுடைய டி.என்.ஏ. தொடர்ந்து தலைமுறைதோரும் தொடரவேண்டும் என்று விரும்புவது இயற்கையே. உலகம் முழுவது ஜாதிகள் உள்ளது. ஆனால் அங்கெல்லாம் ஜாதியை வேறு பெயர்சொல்லி அழைக்கிறார்கள் அவ்வளவுதான்.
இன்று சைக்கிளில் துவங்கி, விமானம் வரை பலவழிகளில் மக்கள் இடம்பெயர்ந்து ஒருவருக்கொருவர் நேரடியாகத் தொடர்புகொண்டு பழகுகிறார்கள். இதனால் சில ஜாதிகள் அழிவதும், புது ஜாதிகள் உருவாவதும் தவிற்கமுடியாதது. மக்கள்தொகை அதிகம் உள்ள ஜாதிகளில் இந்தப்பிரச்சினை பெரிதாகத் தெரியாது. ஒரு பகுதியில் மட்டும் வாழும் குறைந்த மக்கள்தொகை கொண்ட ஜாதிகளில் இவை பெரிய பிரச்சனையாக வெடிக்கிறது.
முடிவுதான் என்ன?
கல்வி அறிவும், பொருளாதார முன்னேற்றமும், பொதுவன பேச்சு மொழியும், நடைமுறை வாழ்க்கையில் பொதுவான பழக்கவழக்கங்களும் பெருகும்போது இந்தப்பிரச்சினை தானாகவே சரியாகும். அதற்கு இரண்டு நூற்றாண்டுகள்கூட ஆகலாம். ஏனெனில் இயற்கையை மீறீ நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. ஊருடன் ஒத்துவாழ் என்று சொன்னதின் அர்த்தம் இதுதான். அதுவரை இந்தப் பொது அறிவை பரப்புவதுதான் நம்மால் செய்யமுடிந்த செயல்.